திங்கள், 2 ஏப்ரல், 2012

அரசியல் வானில் ஒரு நட்சத்திரமாக-- l.k.அத்வானி

அரசியல் வானில் ஒரு   நட்சத்திரமாக-- l.k.அத்வானி



ஜார்க்கண்டில் இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட அகர்வால் என்பவர், எம்.எல்.ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. அகர்வாலின் தம்பி காரில் கொண்டு வரப்பட்ட, 2.15 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்தது. தேர்தல் கமிஷனின் இந்தச் செயல் ஒரு மைல்கல் என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாராட்டியுள்ளார். அவர் தன் இணையதளத்தில், "தேர்தல் கமிஷனின் முடிவு, சிறப்பானது, பாராட்டுக்குரியது. நீண்ட காலமாக பணம், அரசியல் ஆதரவுடன் நடத்தப்பட்ட தேர்தலை, தடுக்கும் வகையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, 2003ம் ஆண்டில், தேர்தல் சீர்திருத்த சட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி எடுத்துள்ள நடவடிக்கை, அவருக்கு சிறப்பு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளது' என, மேலும் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில பா.ஜ. கட்சி தேர்தல் ஆணையரின் நடவடிக்கையை கண்டித்துள்ள போதும் அத்வானி அவர்கள் துணிச்சலாக தனது மனதில் பட்டதை கூறியுள்ளது பாராட்டத்தக்கது .....வித்தியாசமான அத்வானி அரசியல் வானில் ஒரு நட்சத்திரமாக ஓளி வீசிவருகிறார் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக