செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சந்தைப் பொருளாதாரமா? அல்லது சந்தை சமூகமா?

உறவுக்கு இணக்கமான சந்தை பொருளாதாரம் வேண்டுமா?

அல்லது உறவற்ற சந்தை சமூகம் வேண்டுமா?


(நன்றி.விஜயபாரதம்)

ஆங்கிலத்தில்: எஸ். குருமூர்த்தி
தமிழில்: நிகரியவாதி



சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக நடைபெற்று வரும் விவாதம் மிகமிக மேலோட்டமாக உள்ளது. ஓர் ஆழமான, பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடைய விவாதத்திற்கு இருதரப்பு சார்ந்த அடிப்படையான ஆழமான கண்ணோட்டங்களை புரிந்துகொள்வது இன்றியமையாததாகும். பாரம்பரியமாக நம் நாட்டில் நடத்தப்பட்டுவரும் சில்லறை வர்த்தகம் தொடர்பான சில அடிப்படை உண்மைகளைக் காண்போம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் இவற்றை நடத்தி வருகிறார்கள். விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே நல்ல அறிமுகம் உள்ளது. அண்டை அயலார் சார்ந்த பரிவர்த்தனையாக இது உள்ளது. உறவு சார்ந்த வர்த்தக செயல்பாடாக இது உள்ளது.





கிராமச் சந்தைகளில் பெண்கள்

நம் நாட்டில் சுமார் 1.5 கோடி சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடைபாதைகளில் விற்பவர்கள், தள்ளுவண்டிகளில் விற்பவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். உலகிலேயே சில்லறை வியாபாரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இங்குதான் உள்ளனர். 8 இந்தியர்களில் ஒருவர் சில்லறை வியாபாரியாக உள்ளார். ஆனால் இந்தியாவை விட அதிக ஜனத்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் இந்த அளவுக்கு சில்லறை வியாபாரிகள் இல்லை. அங்கு வெறும் 13 லட்சம் சில்லறை வியாபாரிகள்தான் உள்ளனர். சீனாவில் 100 பேரில் ஒருவர்தான் சில்லறை வியாபாரியாக உள்ளார். ஒரு சில்லறை வியாபாரியால் நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களையும் இருப்பு வைக்க முடியாது. இதனால்தான் நிறைய சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடைபாதை வியாபாரிகள், தெருத் தெருவாக நடந்து சென்று விற்பவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தெருக்களில் சின்னஞ்சிறு கடை வைத்திருப்பவர்கள், மளிகைக் கடைகள் போன்றயாவும் சில்லறை வர்த்தகத்தின் கீழ் வருகின்றன. இவர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். இந்திய சில்லறை வியாபாரத்தின் மதிப்பு சற்றேறக் குறைய 40 ஆயிரம் கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு வெறும் 5% மட்டுமே. எஞ்சிய 95% சிறு வியாபாரிகள் வசமே உள்ளது. நம் நாட்டில் சில்லறை வியாபாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இதே முறைப்படித்தான் நடைபெற்று வந்துள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், வேளாண்மை மற்றும் உணவு பொருள் வியாபாரத்தின் பங்கு மொத்த சில்லறை வியாபாரத்தில் 63% ஆகும். 7.4 கோடி சிறு வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள், குறு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கூட்டு செயல்பாடு இங்கு உள்ளது. இது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களிடையே நெருக்கமான உறவு உள்ளது.





சந்தைக் காட்சி

இந்தியாவில் உள்ள 6.8 லட்சம் கிராமங்களில் 5.88 கோடி குறு மற்றும் சிறு விவசாயிகள் உள்ளனர். அவர்கள் 47 ஆயிரம் சந்தைகளில் உள்ள ஒன்றரை கோடி மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். உலகிலேயே மிகவும் பரவலாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வியாபாரம் இதுதான். இருப்பினும் 40% விளை பொருள்தான் இவ்வாறு வியாபாரம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 60% பண்டமாற்று முறையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 60% பகிர்வு மற்றும் 40% விற்பனைதான் கிராமிய இந்தியாவை உயிர்த்துடிப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.





வியாபாரிகளின் எதிர்ப்பு

சில்லறை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு குறித்து ஆய்வு நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் (ஜூன் 2009) பாரம்பரியமாக உள்ள சில்லறை விற்பனையில் 4 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் நடத்தும் சிறு வியாபாரத்தில் 20 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் தவறானது என்பதையும் நிலைகுழு சுட்டிக் காட்டியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது சரிதான். உலகம் முழுவதும் 42,200 கோடி வியாபாரம் நடத்துகின்ற வால்மார்ட் நிறுவனத்தில் 21 லட்சம் பேரே பணியாற்றி வருகின்றனர்.





மொத்த வியாபாரிகள்

இந்தியாவில் சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 5%த்திற்கும் குறைவானவர்களுக்கே கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலைவாய்ப்பை வழங்கமுடியும். எனவே நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட சிறுவணிகத்தில், ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களில் 20ல் ஒருவருக்குத்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஒரு கோடி பேருக்கு சில்லறை வியாபாரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற புள்ளிவிவரத்தை வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா எங்கிருந்து பெற்றார்? அவர் எவ்வாறு கணக்குப் போட்டு இதை தெரிவித்தார்? சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் நான்கு காரணங்களை அடுக்குகிறார்கள்.



1) சில்லறை வியாபாரம் நிறுவன ரீதியாக கட்டமைக்கப்படுமானால் இப்போது வீணாகக்கூடிய ரூ.50,௦௦௦ கோடி மதிப்புள்ள வேளாண் பொருட்கள் செம்மையான முறையில் பாதுகாக்கப்படும். சேதாரம் தவிற்கப்படும்.



2)இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். விவசாயிகளின் விலைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.



3) வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் வேளாண் விளைபொருட்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். சீனாவில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சில்லறை வியாபாரிகளால் இவ்வாறு கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.



4) வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.முதலாவதாக வேலை வாய்ப்பு குறித்து கூறப்படுவது அபத்தமானது, அடிப்படையற்றது. உலகில் வேறு எந்த நாட்டிலும் வால்மார்ட்டோ அல்லது டெஸ்கோவோ இந்த அளவுக்கு வேலைவாய்ப்பை உயர்த்தவில்லை. எனவே இங்கும் வேலைவாய்ப்பு உயர வாய்ப்பில்லை.



இரண்டாவதாக சீனாவில் செய்து வருவதைப் போல வால்மார்ட்டும் டெஸ்கோவும் பொருட்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்தியப் பொருளாதரமும் சீனப் பொருதாரமும் வெவ்வேறானவை. சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகர்வு 35% மட்டுமே. எனவே அங்கு ஏற்றுமதிக்காக உள்ள உபரியின் அளவு 65% ஆகும். இது பல பத்தாண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58% உள்நாட்டு நுகர்வுக்குச் சென்றுவிடுகிறது. ஏற்றுமதி உபரி என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு இல்லை. எனவே வால்மார்ட் இங்கு கால்பதித்தால் சீனாவிலிருந்து குறைந்த விலையில் பொருட்களை கொண்டுவந்து குவிக்கும்.



ஏற்கனவே சீனப் பொருட்கள் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு தற்போது 2000 கோடி டாலராக உள்ளது. 2014ல் இது 27850 கோடி டாலராக உயர்ந்துவிடும். இந்தியா வளர்ச்சியடையாது. மாறாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் இந்தியாவின் தரித்திரத்தை விஸ்வரூபப்படுத்திவிடும்.



இடைத்தரகர்களை ஒழித்துவிடும். விவசாயிகளின் செழிப்பை அதிகரிக்கும் என்று வால்மார்ட் குறித்தும் டெஸ்கோ குறித்தும் கூறப்படுகிறது. இங்கிலாந்திலேயே பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் டெஸ்கோதான். அது என்ன செய்கிறது. இங்கிலாந்தில் உள்ள சிறு விவசாயிகளை சுரண்டுகிறது. உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளை அது இவ்வாறு சுரண்டிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்கள் விருப்பம்போல சாகுபடி செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் சொல்கின்றவற்றைத்தான் சாகுபடி செய்யமுடியும். இது வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துவிடும். உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப விவசாயிகள் பயிரிடுவது முடிவுக்கு வந்துவிடும்.



சிறு விவசாயிகள் நேரடியாக உள்ளூர் சந்தைக்கு தங்கள் விளை பொருளை கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பல்வேறு இடைத்தரகர்களை பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சூப்பர் மார்க்கெட்டின் தரத்திற்கு ஏற்ப அளவு மற்றும் தரம் சீரானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட நேரிடும். தரம் சரியானதாக இல்லையென்றால் பொருள் நிராகரிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் சிறு வணிக நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இணக்கமானவை என்பது முற்றிலும் தவறானதாகும். அவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை.



வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் சேமிப்பு வசதிகளையும் மற்றவற்றையும் அதிகரிக்கும். இதனால் சேதாரம் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2% மட்டுமே. ஆனால் 40% சாலைப்போக்குவரத்தை இந்த தேசிய நெடுஞ்சாலைகள் கையாள்கின்றன. மற்ற சாலைகளில் 20 அடிக்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும். உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே இந்த சாலைகளின் மூலம் பொருட்களை கொண்டுவர முடியும்.



வால்மார்ட் களும், டெஸ்கோக்களும் சாலைகளைப் போடாது. சாலைகளைப் போடவேண்டியது அரசின் பணிதான். இதற்கு வால்மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் தேவையில்லை.



அடுத்தபடியாக சேமிப்பு குறித்து பார்ப்போம். சமீபத்தில் எம்.ஐ.டி. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்திய கிராமங்களில் காணப்படும் நிலவரங்கள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழிருந்து மேலே செல்வதின் வாயிலாகத்தான் சேமிப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். விளை பொருட்களை சேதம் இன்றி பாதுகாக்க வேண்டுமானால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக குளிர் சாதன வசதி உடைய சேமிப்பகங்களைக் கட்டலாம். இதுதான் பயனுள்ளதாக இருக்கும். இதுதான் கிழிருந்து மேலே செல்லும் முறையாகும். மாறாக வால்மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் மேலே இருந்து கீழே இறங்கி வந்து சேமிப்பு வசதிகளை செய்து தரும் என்பது சரியானதல்ல. இந்த ஆய்வறிக்கை வால்மார்ட்டுகளின் முகமுடியை கிழித்தெறிந்துள்ளது.



இறுதியாக இந்திய சில்லறை வியாபாரம் தொடர்பான முக்கிய அம்சத்தை மேலோட்டமான விவாதம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய சில்லறை வர்த்தகம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரமே உறவுகளின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறதே தவிர. ஒப்பந்தங்களின் அடிப்படையில் இல்லை. இதனால்தான் 60% வேளாண் பொருட்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. உறவுகளின் அடிப்படையில்தான் இந்த பகிர்வு நடைபெறுகிறது. உறவுகளுக்கு பதிலாக ஒப்பந்தங்கள் மேலாதிக்கம் செலுத்த முற்படுமானால் சந்தைப் பொருளாதாரம் என்பது சந்தை சமூகமாக மாறிவிடும். குடும்பங்கள் கூட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடும்.



“இங்கிலாந்தில் சமூகம் என எதுவும் இல்லை. தனி நபர்கள் இருக்கிறார்கள். குடும்பங்கள் இருக்கின்றன. அவ்வளவுதான்” என்று மார்க்கரெட் தாட்சர் ஒருமுறை கூறினார். அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் பாரம்பரிய சமூகத்தின் இயக்கம் இன்றி பாரம்பரிய ரீதியாக குடும்பங்கள் உயிர்த்திருக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக மெய்ப்பித்து காட்டிவிட்டன. 1970களில் அமெரிக்க பொருளாதார ஆய்வு மையம் குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளை கூட கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. வரைமுறையற்ற சந்தை, முதலில் உறவு அடிப்படையிலான சமூகத்தை நிர்மூலமாக்குகிறது. அது குடும்பத்தை சீர்குலைக்கிறது. கடைசியாக ஒப்பந்தம் அடிப்படையிலான சந்தை சமூகத்தை உருவாக்குகிறது.



உறவு அற்ற சில்லறை வியாபாரத்தின் முன்னோடிகளாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் உள்ளன. இது ஒப்பந்தம் சார்ந்த அமெரிக்க மற்றும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். மேலை நாடுகளில் கூட சந்தைப் பொருளாதாரமா? சந்தை சமூகமா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. சந்தை சமூகம் ஆங்கிலோ சாக்ஸன் அம்சத்தைக் கொண்டது என்று மற்றவர்கள் சாட தொடங்கியுள்ளனர்.



முத்தாய்ப்பு: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது உண்மையான பிரச்சினை அல்ல. இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும், மேட்டுக் குடியினரும் இந்தியா இறுதியில் என்னவாகவேண்டும் என நினைக்கிறார்கள் என்பதுதான் அடிப்படைப் பிரச்சினையாகும். உறவுக்கு இணக்கமான சந்தை பொருளாதாரம் வேண்டுமா? அல்லது உறவற்ற சந்தை சமூகம் வேண்டுமா? என்பதுதான் பிரதான கேள்வியாகும்.



இக்கட்டுரை தி நீயூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் டிசம்பர் 7 அன்று வெளியானது. அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்.



http://expressbuzz.com/opinion/columnists/market-economy-or-market-society/340201.html

தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ?


                           தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ?

                                                       

<>பி.எஸ்.ராஜேஷ்





( ஜூன் 10,2004----திண்ணை)



வெகுஜன பத்திரிகைகளும், அறிவு ஜீவிகளும் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த சோனியாவின் செயலை ஆக..ஓகோ...என வழக்கம் போல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்....கருணையுள்ளம் கொண்டவர், இந்திரா காந்தி சுடப்பட்ட போது உயிரை துச்சமென மதித்து ஓடோடி வந்தார்(உயர்ந்த ஆன்மா)....பதவி ஆசை இல்லாதவர்....ராஜிவ் காந்தியை கொன்ற பெண் தீவிர வாதி நளினி கைக்குழந்தையோடு இருப்பதால் மரணதண்டனையை மன்னித்தவர்....என்றெல்லாம் சொல்லும் இவர்கள் வசதியாக சில விஷயங்களை மறந்து விடுகின்றனர்.


1.இந்திரா காந்தி சுடப்பட்ட போது ,உயிரை துச்சமென மதித்து ஓடோடி வந்தார் என்று ஜோதிர்லதா கிரிஜா எழுதி இருந்தார்....உண்மையெனில் 1971 பாரத-பாகிஸ்தான் போரின் போது இந்தியன் - ஏர்லைன்ஸ் முழு நேர விமான ஓட்டியாக இருந்த ராஜிவ் காந்தியையும் தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு , போருக்கு பயந்து இத்தாலிக்கு பறந்தது ஏன்.... ? அதுவும் இந்தியன் - ஏர்லைன்ஸ் தனது அனைத்து பணியாளரையும் தயார் நிலையில் இருக்குமாறு பணித்த நிலையில் ஏன் தனது குடும்பத்தை மட்டும் அழைத்து கொண்டு இத்தாலி பறந்தார்.... ? அதுவும் பிரதம மந்திரியின் வீட்டில் பாரத நாட்டிலேயே உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள வீட்டில் இருக்கப் பயந்தவர் சோனியா.... மக்களாகிய நாம் எக்கேடு கெட்டும் போகட்டும், தனக்கு தன் குடும்பம் மட்டும் முக்கியம், என்றுதானே நினைத்தார் சோனியா....பாரத மக்களாகிய நாம் பறந்து போக வேறு தேசம் இல்லாமல், ஏனெனில் நமக்குதான் இது தாய் நாடு ஆயிற்றே...மகாகவி பாரதி சொன்ன மாதிரி வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம் இல்லையேல் அனைவரும் வீழ்வோம் என கருதி ,எதிரியோடு போரடி, நூற்றுகணக்கான பேரை இழந்து தாய் நாட்டின் மானத்தை காப்பாற்ற, பாகிஸ்தான் சரணாகதி என்ற செய்தி, அதுவும் பி.பி.சியில் வந்த பின்னரே பாரத நாட்டிற்கு திரும்பியவர் வீர மங்கை அன்னிய சோனியா.. ? ? ? ?

2.அன்னிய சோனியாவின் வீரத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ....1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து , மத்தியில் ஜனதா அரசு அமைந்த போது, எமர்ஜென்சியின் போது இந்திரா காந்தியால் கைது செய்யப்பட்ட தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்து விட்டதால், தங்களை நிச்சயம் பழிவாங்குவார்கள் என்று அதிபுத்திசாலித்தனமாக கணக்கு பண்ணி , உயிருக்கு பயந்து மூட்டை முடிச்சுகளோடு தனது குடும்பத்துடன் புதுடில்லி, சாணகியபுரியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் அடைக்கலமானார் சோனியா காந்தி.... பின் மேனகா ,இந்திரா காந்தி மற்றும் சஞ்சை காந்தி ஆகியோரின் வற்புறுத்தலின் பேரிலே வீடு திரும்பினார்....ஆக என்ன ஒரு வீர மங்கை ...அன்னிய சோனியா.. ?


3.சோனியா பிரதமரானால் சிறிது காலத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பார்கள், மீண்டும் ஒரு தேர்தல் வரும் என நினைத்து, தற்போது பதவி ஏற்கவில்லை என்றால், ஏன் 1999-இல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார்....12-வது லோக்சபா 18 மாதத்திற்குள் கவிழ்க்க சென்னையிலிருந்து மூட்டை முடிச்சுக்களோடு புதுடில்லியின் மெளரியா ஒட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவிடம் தக்க அறிவுரை கூறி 18 மாதமேயான இந்த ஆட்சியை கவிழ்த்து மறுதேர்தல் வரவைத்து பாரதத்தின் பொருளாதாரம் சீர்கெட விரும்பவில்லை என்று சொல்லியிருப்பாரே....ஏன் சொல்லவில்லை.... ?ஒரு வேளை ஒரு ரூபாய் செலவுகூட இல்லாமல் அடுத்த தேர்தல் வரும் என 1-ம் வகுப்பு பள்ளி மாணவனாய் நினைத்திருப்பாரோ.... ?கவிழ்த்தது மட்டுமல்லாமல் அன்றைய ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணனிடம் தனக்கு 272 எம்.பிக்கள் ஆதரவு இல்லாமலே இருப்பதாக பொய் சொல்லி தான் ஆட்சியமைக்க உரிமை கேட்டது ஏன்.. ? பதவி ஆசை இல்லாமலா.... ?

மற்றொன்று, ஜெயின் கமிஷனின் இடைக்கால தீர்ப்பு வந்தவுடனே 1997-இல் தி.மு.க வை ஐக்கிய முன்ணணி ஆட்சியை விட்டு விலக்க வேண்டும் என்று சொல்லி சீதாராம் கேசரிக்கு நிர்பந்தம் கொடுத்து , இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் ஐ.கே.குஜ்ரால் ஆட்சியை கவிழ்த்தது சோனியா தானே....11-ம் லோக்சபாவின் பதவி காலம் முடிய 1 1/2 வருடங்கள் இருக்க பல கோடி செலவில் மீண்டும் ஒரு தேர்தல் நடக்க யார் காரணம்.. ? அடிக்கடி தேர்தல் நடந்தால் பொருளாதாரம் முன்னேறும் என்று சிறு பிள்ளைத்தனமாக சோனியா நினைத்திருப்பாரோ.... ?

4.சோனியா தான் பிரதமராக பதவியேற்காமல் மன்மோகன் சிங் போன்றவரை பிரதமராக்கினால் நன்றாக இருந்திருக்கும் என சில நடுநிலைமைவாதிகள் விரும்பியது அவர் உள்ளுணர்வில் விழுந்திருக்கும் என்றால், உள்ளுணர்வு மன்மோகன் உடனிருக்க ...ஏன் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சந்தித்து தான் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.... ? அப்துல் கலாம் சில விளக்கங்கள் கேட்டிருப்பதாக தானே வெளியில் வந்து பேட்டியளித்தார்....பின் நடந்தது என்ன.. ? காலங்கள் கடந்துதான் சில உண்மைகள் வெளி வரும்..பொறுத்திருப்போம்....


5.எந்த நாடு , எந்த மதம் , எந்த இனம் போன்றவற்றை கடந்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது மட்டுமே முக்கியம் என்ற ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு , பெயர் பெற்ற நிர்வாக திறமைக்காக சிங்கப்பூரின் இரும்பு மனிதர் திரு லீ குவான் அவர்களை , பிரிட்டனின் மார்கிரெட் தாட்சர் அவர்களை, தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இஸ்ரேலின் ஏரியல் ஷெரான் அவர்களை, உலகமெங்கும் கொடிகட்டி பறக்கும் பில் கேட்ஸ் அவர்களை, கருணை மிக்கவர் வேண்டுமென்றால் உலகின் பல பகுதிகளில் அனாதை மற்றும் முதியோர் விடுதிகள் நடத்தும் நபர்களை, வீர மிக்கவர் என்றால் உலக குத்து சண்டை சாம்பியன் மைக் டைசனை, பதவி ஆசையே இல்லாதவர் வேண்டுமென்றால் ஜெர்மனியின் ஹெல்மெட் கோல் போன்றவர்களை உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் பாரத நாட்டிற்கு அழைத்து வந்து பிரதமராக்கி விடலாமே.. ? அப்புரம் ஒரு சரியாக 15 வருடங்களுக்கு பிறகு அன்னிய சோனியாவின் வழியில் இந்திய குடியுரிமை ஆக்கி விடலாம்...பின் ஏன் 1942-இல் காந்தியடிகள் பொழுது போகாமலா வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தினார்... ?

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி செக்கிழுக்க வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை , தனது மனைவி கர்ப்பிணி என தெரிந்தும் குழந்தையின் முகதை பார்த்து விட்டால் தான் கொண்ட லட்சியம் மாறிவிடும் என நினைத்து சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதன் என்ன முட்டாளா.. ? சின்ன வயதிலே தூக்கு கயிற்றை முத்தமிட்டு செத்து போனானே அந்த பஞ்சாபின் வீர இளைஞன் பகத் சிங் , மண்டையை தடியால் பிளக்கும் போதும் வந்தேமாதரம் என்று சொல்லி தாய் நாட்டின் கொடியை விடாமல் இறுகப்பற்றி உயிர் போன பின் தேசிய கொடியை விட்டானே திருப்பூரின் குமரன், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் என்பவனால் மூடப்பட்ட மைதானத்திற்க்குள் மிருகத்தனமாக் சுட்டு கொல்லப்பட்ட காட்சியை கண்டு , மனம் வெதும்பி அதுவரை நமது நாடு அடிமைப்பட்டதே அறியாத சர்தார் உத்தம் சிங் என்ற படிப்பறிவில்லாத வீர சீக்கிய இளைஞன், பல நாடுகள் சென்று மெக்கானிக் என்ற பெயரில் உலவி, ஜாலியன் வாலாபாக் படுகொலை புகைப்படத்தை தினம் தினம்மனதிற்குள் பார்த்து லட்சியம் தீர்ந்துவிடாமல் வளர்த்து கொண்டு , பல ஆண்டுகள்கழித்து ஜெனரல் டயரை பிரிட்டனில் சுட்டு கொன்றானே இவர்கள் எல்லாம் செய்த செயல் முட்டாள்தனமானதா.. ?,இவர்களை போன்ற எண்ணற்ற வீரர்கள்அன்னியனை விரட்டி இந்த தேசத்திற்கு வாங்கிய சுதந்திரம் என்ன தேவையற்றதா... ? எந்த நாட்டிலும் இந்த கொடுமைநடக்குமோ..தெய்வம்
பார்க்குமோ என பாரதி கதறியது ஒருவேளை இது போன்ற காட்சிகளைத்தானோ.. ?

பாரதம் கர்ம பூமி....புண்ணிய பூமி....முனிவர்களாலும் தேவர்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி இது.... நம் நாட்டில் நல்லவர்கள் , வல்லவர்கள் தேசத்தை வழி நடத்தகூடியவர்கள் பலர் இருக்கின்றனர்....அவர்களை நமக்குவழிகாட்டும் தலைவனாக தேர்ந்தெடுப்போம்....மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, அடுத்து ஒரு வேளை ஒரு கொலம்பியா நாட்டு மாது அல்லது மெக்ஸிகோ மங்கை யாரோ ஒருவர் காங்கிர்ஸின் தலைவராகலாம்...அது அந்த கட்சியின் சாபக்கேடு....காந்தியின் சாபம்....காங்கிர்ஸை கலைக்க சொன்னது நடக்காததால் அது காந்தி சாபம் என்றே எடுத்து கொள்வோம்....ஆனால் நம்து நாட்டின் உயர் பொறுப்பில் அவர்கள் அமர்ந்தால் ,....பாரதத்தின் தேசிய உணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பத்திரிக்கைகளின் கடமை.... நமது துரதிஷ்டம் அந்த பத்திரிக்கை அறிவு ஜீவிகள் தங்களின் லட்சியத்தை மறந்து விட்டு , அன்னியருக்கு துதிபாடுகிறார்கள்....கட்சிகளை மறந்து, மதங்களை கடந்து அன்னியர் யாரும் உயர் பதவியில் அமர்வதை எதிர்ப்பதே த்ங்கள் நல்லுயிரை ஈந்து தேசத்தை காத்த மகாவீரர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு சிறிய அஞ்சலியாக இருக்கட்டும்

போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்


                 போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்

பி.எஸ்.ராஜேஷ்                                 ( 27.08.2004  Thinnai)


ஊழல் , கிரிமினல் மற்றும் பாலியல் பலாத்கார குற்றபத்திரிக்கை பின்னணி கொண்ட மத்திய அமைச்சர்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி போராடும் போது, காங்கிரஸீன் மத்திய தலைமை பாஜக -வில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள எவரேனும் மீது இத்தைகய வழக்குகள் இருக்கிறதா என தேடிய போது பல ஆண்டுகளுக்கு முன் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு அவர்களுக்கு தெரியவே, என்ன வழக்கு என்பதே தெரியாமல் ம.பி. முதல்வராக இருந்த உமா பாரதியை ராஜினாமா செய்யுமாறு பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்....அவரும் பதவி விலகி கோர்ட்டில் சரணடைந்து தற்போது சிறையில் இருக்கிறார்....

இத்தாலிய மங்கையின் தலைமையிலான காங்கிரஸிடம் நாம் தேசிய உணர்வுகளை எதிர்பார்ப்பதுதவறு என்பதைஇத்தருணத்திலும் அவர்கள் உணர்த்தினர்....

உண்மையில் உமாபாரதி செய்தது என்ன ? கொலை முயற்சி வழக்கு போட என்ன காரணம் ?

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் அப்போது நடந்தது என்ன.. ? சுதந்திர பாரதத்தில் தேசிய கொடியை ஏற்றுவது கொலைபாதக செயலா...சற்று விரிவாக பார்ப்போம்.

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் லால் செளக் என்ற ஓரு மைதானம் உள்ளது...1980-களில் இறுதியில் உள்ளூர் பத்திரிகைகளில் முஸ்லிம் தீவிரவாதிகள் முடிந்தால் இந்த மைதானத்தில் பாரத கொடியை ஏற்றுங்கள் என சவால் விட , ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேச பக்த அமைப்புக்ள் மாநில , மத்திய அரசுகளிடம் அந்த சவாலை ஏற்று பாரத தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தியது....

ஆனால் தீவிரவாதிகளின் மிரட்டலை மாநில , மத்திய,அரசுகள் சந்திக்க மறுக்க, ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (அகில பாரத மாணவர் அமைப்பு) காஷ்மீர் மாநிலத்திற்குள் கொடியேற்ற நுழைந்த போது 1989-இல் உதாம்பூர் ரயில் நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள்....பிரதமர் வி.பி.சிங் -அவர்களை ஏ.பி.வி.பி. பிரதிநிதிகள் சந்தித்து பாரத தேசிய கொடியை லால் செளக்-கில் ஏற்ற கோரிக்கை விடுத்தனர்....ஒரே வாரத்தில் அதே இடத்தில் கொடியேற்றுகிறேன்....என வி.பி.சிங் சூளுரைக்க ஏ.பி.வி.பி தொண்டர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்....

ஆனால் வி.பி.சிங், சந்திரசேகர் பின்பு வந்த நரசிம்ம ராவ் ஆகியோரும் தேசிய கொடியை ஏற்றாமல் போகவே பாஜக அந்த சவாலை சந்திக்க முன் வந்தது....1991-இல் அப்போதைய பாரதீய ஜனதாவின் அகில பாரத தலைவர் பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி 'ஒருமைப்பாட்டு யாத்திரை ' (ஏகதா யாத்திரை) என பெயரிட்டு கன்னியாகுமரியிலிருந்து, சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சகோதரரிடமிருந்து மூவர்ண கொடியை பெற்று, பாரத முழுவதும் ரதயாத்திரை சென்று காஷ்மீரில் என்ன நடக்கிறது என மக்களிடம் விளக்கினார்....போலி மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் அன்றைய ஜோஷியின் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தின ....அதாவது சுதந்திர பாரதத்தில் தேசிய கொடியை

ஏற்றுவது மைனாரிட்டி ஓட்டு பொறுக்கும் கட்சிகளுக்கு பிடிக்கவில்லை....

ஸ்ரீநகரின் லால் செளக்கில், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மத்தியில்,ஜோஷி 1992-ஜனவரி 26-ல்

பாரதத்தின் மூவர்ண கொடியை வெற்றிகரமாக ஏற்றினார்....

அதே தினம் நாடு முழுவதும் பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடிகொடியேற்றப்பட்டது...அப்போது கர்நாடக மாநிலம் ஹுப்ளி -கிட்டூர் ராணி சென்னம்மா மைதானத்தில் தேசிய கொடியேற்ற பாஜகவினரும்,பிற மக்களும் சென்ற போது ,அப்பகுதி முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே , முஸ்லீம்களின் தேச விரோத எதிர்ப்புக்கு பணிந்து, மதரீதயான பதட்டம் ஏற்படும் என்ற காரணம் காட்டி கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் அரசு தேசியகொடியேற்ற தடை விதித்தது....சுதந்திர பாரதத்தில் வெட்ககேடான இந்த செயலை கண்டிக்க கருணாநிதிகளூம் , வைகோகளும், சுர்ஜித்களும் முன்வர வில்லை....ஒரே காரணம் ஓட்டு வங்கிதான்....

உண்மையில் இந்திரா காந்தியால் 1971 டிச23 அன்று மத்திய அரசு கொண்டு வந்த THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT -69, 1971 புதிய சட்டத்தின் படி குடியரசு, சுதந்திர தினங்களில் தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்தாலோ அவமரியாதை செய்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும் ....ஆனால் கொடியேற்ற
சென்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி தனது முஸ்லீம் பற்றையும் போலி மதசார்பற்றதன்மையையும் நிருபித்தது காங்கிரஸ் அரசு....

முஸ்லீம்களால் ஈத்கா என அழைக்கப்படும் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் Anjuman-e-Islam என்ற முஸ்லீம் அமைப்புக்கும் ஹுப்ளி நகராட்சிக்கும் நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தன....1939 முதல் அடுத்து வருகிற 2038 வரை தாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளதாக Anjuman-e-Islam கூறியதை முன்சீப் முதல் உயர் நீதி மன்றம் வரை தள்ளுபடி செய்து, அந்த மைதானம் பொதுவான இடம் என்று தீர்ப்பளித்தது....மேலும் உயர் நீதி மன்றம் தனது தீர்ப்பில்

அந்த மைதானத்தில் முஸ்லீம்கள் வருடத்தில் இருமுறை தொழுகை நடத்தவும்,மேலும் Anjuman-e-Islam கட்டிய கட்டிடத்தை இடிக்கவும் உத்தரவிட்டது....ஆனால் அதற்கு தடைவிதிக்க, Anjuman-e-Islam உச்ச நீதிமன்றத்தை அணுகியது....இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் , அந்த மைதானம் பொதுவான இடம் என்றும் Anjuman-e-Islamஅமைப்பிற்கு சொந்தமானதல்ல என்றும், வருடத்தில் இருமுறை தொழுகை நடத்த மட்டுமே அனுமதிப்பதாகவும் கூறியது....

இந்த மைதானத்தில் சில பகுதிகளில் சந்தை போன்று காய்கறி , பழங்கள் விற்பனையும், இன்னொரு பகுதியில் சிலர் ஆடு , மாடுகளை மேய்த்து கொண்டும் , சில பகுதிகளை சிறுநீர் கழிக்கவும் பலர் பலவிதமாக பயன்படுத்தி வந்தனர்...ஆனால் பாரத தேசிய கொடியை ஏற்ற மட்டுமே முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்....

1992 முதல் ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் அந்த மைதானத்தில் பாரதீய ஜனதாகட்சியினர் கொடியேற்ற முயற்சிப்பதும், முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், கடைசியில்போலீஸ் தடியடிமற்றும் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி சூட்டில் முடிவதும் வாடிக்கையாகி விட்டது....

இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் அகில பாரத பொறுப்பில் இருந்த செல்வி உமாபாரதியை 1994 -ஆகஸ்ட் 15 -இல் ஹுப்ளி -யில் கிட்டூர் ராணி சென்னம்மா மைதானத்தில் தேசிய கொடியேற்றஅழைத்திருந்தனர்....கூட்டம் சேரவோ, அந்த மைதானத்தில்
தேசிய கொடியேற்றவோ அரசு தடை விதித்த நிலையில் உமா பாரதி தலைமையில் பாஜக வினர் தடையை மீறிகொடியேற்றினர்....உண்மையில் அந்த மைதானத்தில் தேசிய கொடியேற்றப் பட்டதால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டிருக்க வேண்டும் ....ஆனால் மதவெறி பிடித்த முஸ்லீல் அமைப்பின் வெறித்தனமான பேச்சால் முளை சலவை செய்யப்பட்டிருந்த முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.... 5 பேர் கொல்லப் கொல்லப்பட்ட இந்த வன்முறைக்கு தேசிய கொடி ஏற்றிய உமா பாரதி எப்படி பொறுப்பாக முடியும்.. ?

முகமது நபியும், அல்லாவும் ஹுப்ளி -யில் பாரத தேசிய கொடியை ஏற்ற கூடாது.... மீறி ஏற்றப்பட்டால் தண்டிப்பேன் என முஸ்லீம்களிடம் சொன்னார்களா.. ? பாரத நாட்டின் ஏதாவது பகுதியில் தேசிய கொடிஏற்ற தடை என்பது ஒரு வித அவமானம் என்பது நமது மதசார்பற்ற( ?)கட்சிகளுக்குஏன்புரிவதில்லை....அமெரிக்காவில்,இங்கிலாந்தில்,ஜெர்மனியில் பாரத கொடியேற்றி சுதந்திரதினம்கொண்டாடுகிறார்கள்....ஆனால் சுதந்திர பாரதத்தில் தடை..

பின்னர் நடந்தது என்ன தெரியுமா.. ....Anjuman-e-Islam அமைப்பின் கிளையான Deendar Anjuman என்ற இயக்கம், தடை செய்யப்பட்ட சிமி (இஸ்லாமிய மாணவர் இயக்கம்) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது, மேலும் ஆந்திரா, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் மசூதிகள், சர்ச்கள் போன்றவற்றில் குண்டு வைத்து மத கலவரத்தை தூண்ட நினைத்த காரணத்திற்காக கர்நாடகாவை அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசாலேDeendar Anjuman மீது வழக்கு தொடரப்பட்டது...பலர் கைதுசெய்யப்பட்டனர்....

http://www.rediff.com/news/2001/may/03ap1.htm
http://www.rediff.com/news/2001/may/17ap.htm

முதலில் ஆர்.எஸ்.எஸ். மீது பழிபோட்ட நமது மதசார்பற்றகட்சிகளும்,
முற்போக்கு பத்திரிக்கைகளும் பின்னர் வாய் மூடி மெளனம் காத்தது வேறு விஷயம்....பாஜக-வின் இடைவிடாத போராட்டம் காரணமாக கர்நாடக அரசுடன் ஒரு அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட்டு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் அந்த மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்ற முடிவு எட்டப்பட்டது...பின்னர் உமாபாரதியின் மீதான வழக்கில் ஆதாரம் இல்லை என்று அரசு கோர்ட்டில் தெரிவித்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறியது....ஆனால் தரம்சிங் தனது இத்தாலிய எஜமானியின் விசுவாசத்தை நிரூபிக்க மீண்டும் வழக்கை நடத்த போவதாக அறிவித்துள்ளார்....

ஆகா இன்று மட்டும் சுதந்திர போரட்ட கால தலைவர்கள் உயிருடன் இருந்துஅன்னிய சோனியாவின் எதிர்ப்பாக அரசியல் நடத்தினால்....ஒத்துழையாமை இயக்கத்தின் முடிவில் செளரி-செளரா வில் ஏற்பட்ட வன்முறை காரணமாக காந்தியடிகள் மீது கொலை முயற்சி வழக்கு,வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக அகமத் நகர் சிறையில் அடைக்கப்பட்ட வல்லபாய் படேல் மீது ஒரு வழக்கு , தடையை மீறிய கொடிகாத்த குமரன் மீது இன்னொரு வழக்கு, தடையை மீறி உப்பு காய்ச்சிய ராஜாஜி மீது ஒரு வழக்கு, போட்டாலும் போடுவார்கள்.... நல்ல காலம் அவர்கள் இன்று உயிருடன் இல்லை....

ஞாநிக்கு சில கேள்விகள்-- திண்ணை 29.04.2004

--------------------------------------------------------------------------------

ஞாநிக்கு சில கேள்விகள்   (  திண்ணை 29.04.2004)

(பி எஸ் ராஜேஷ் )


திரு ஞாநி அவர்களுக்கு,

தேர்தல் சீர்திருத்தம் பற்றிய கட்டுரையில் உருப்படியாக ஏதாவது குறிப்பிட்டுஇருப்பீர்கள் என்று படித்து பார்த்தால் ஞாநிகளிடம் துறவிகளிடம் இருக்கின்ற ஞானம் உங்கள் கட்டுரையில் இல்லை.வெறுமனே பாஜக எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக உள்ளது.உங்களிடம் சில கேள்விகள்.

1 .மத்தியில் பாஜக--வை ஆதரிக்காத கட்சிகள் என்று குறிப்பிட்டுள்ள கம்யூனிஸ்ட்கள் 1989-ல் தேசிய முன்ணனி என்ற கூட்டணியில் பாரதிய ஜனதாவுடன் இருந்தது தங்களூக்கு மறந்து விட்டதா.. ?

2.பாரதீய ஜனதாவின் விஸ்வரூபம் தான் தங்களை தேர்தல் சீர்திருத்தம் பற்றி சிந்திக்க தூண்டியதா.. ?இதற்கு முன்னர் சீர்திருத்தம் பற்றி எந்த மேடையிலோ அல்லது பத்திரிக்கையிலோ குறிப்பிட்டு இருக்கின்றீர்களா.. ? ஆகா நாட்டை பற்றி சிந்தனை உங்களுக்கு வர கூட பாரதிய ஜனதா தான் காரணமா.. ? நல்லது.ஏன் சுத்தி வளைத்து பேச வேண்டும்...பாரதீய ஜனதாவை மட்டும் தடை பண்ணி விடலாமே.. ?

3.மதவாத பா.ஜ.க என்று சொல்லி உள்ளீர்கள்.எது மதவாதம்.. ?அனைவரும் சமம்.இமையம் முதல் குமரி வரை ஓரே நாடு,ஒரே மக்கள், ஓரே சட்டம் .இதில் எங்கே உள்ளது பாரபட்சம் ?அனைவருக்கும் ஒரே நீதி இது மதவாதமா.. ?காஷ்மீருக்கு மட்டும் பிரிவு370-ன்படிதனிச்சலுகை.இந்தியபிரதமரேநினைத்தாலும் ஒரு கிரவுண்ட் அல்ல ஒரு செண்டி மீட்டர் இடம் காஷ்மீரில் வாங்க முடியாது..காஷ்மீரில் மட்டும் தொழில் வரி,வீட்டு வரி,சொத்து வரி இல்லை.காஷ்மீரி பெண் இந்தியாவின் பிற மாநில ஆடவரை திருமணம் செய்தால் பொண்ணுக்கு குடும்ப சொத்தில் பங்கு இல்லை.காஷ்மீரில் மட்டும் ஒரு காலம் வரையில் முதல்வரை பிரதமர் என்று சொல்லும் நிலை..இதை எதிர்த்து ஒரு நாட்டுக்குள் இரு பிரதமரா.. ? என போராடி கொலை செய்யப்பட்டவர் பாரதிய ஜனசங்க தலைவர் ஷியாம பிரசாத் .காஷ்மீருக்குள் நுழைய பெர்மிட் வேண்டும் என்ற நிலையை எதிர்த்து போராட்டம் செய்தது யார்.. ? இதே இன்றைய பா.ஜ.க தான்...கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். மாஸ்கோவுக்கும் டில்லிக்கும் ரஷ்யா அரசு செலவில் சொகுசு பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்..பாரததுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது இந்தியாதான் தவறு செய்கிறது என்று சொல்லி பகிரங்கமாக சீனாவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லை தாண்டிய நேசக்காரர்களுக்கா நீங்கள் ஆதரவு தர சொல்கீறீர்கள்...முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து பாரத நாட்டை விடுதலை செய்ய சீன ராணுவம் வந்ததாக கூறியவர்கள் கம்யூனிஸ்ட்-ன் ஒரு பிரிவினர்..இது தான் தாங்கள் விரும்பும் தேசபக்தியா.. ?.. ?

4. எது மதவாதம் ?ஆப்கானில் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த டில்லியின் இமாம் புகாரி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களிடம் என்ன பேசினார்... 'அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்க இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்னை தடுத்தால் அதுஎன் கால் தூசுக்கு சமம் என்ற போது பாஜக-வை தவிர வேறு எந்த கட்சிக்காவது கண்டிக்க தைரியம் இருந்ததா,, ?

5. பாரதத்தின் பாராளுமன்றத்தில் எம்.பி யாக அப்போதிருந்த இப்ராகிம் சுலைமான் சேட் பாகிஸ்தானில் போய் என்ன சொன்னார்..இந்தியாவில் முஸ்லீம் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று.. ' இதை ஏன் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்கவில்லை.. ?

6. பாரதிய ஜனதாவில் இஸ்லாமியர்கள்,கிருஸ்தவர்கள் ,சீக்கியர்கள் பல பொறுப்புகளில் இருக்கின்றனர்.அது உங்கள் பார்வையில் மதவாத கட்சி. முஸ்லீம் லீக்கில் இந்துக்கள் இருக்கின்றனரா.. ?ஆனால் அதுமதசார்பற்ற கட்சி..முஸ்லீம்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள ,முஸ்லீம் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள தேசபிரிவினைக்கு காரணமான முஸ்லீம் லீக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தானே மதவாத கட்சியாகும்.. ?ஆகா குப்பைக்கு போகும் உங்கள் மதசார்பற்ற தன்மையை எப்படி பாராட்டுவது.. ?

எந்த நாட்டிலும் சிறுபான்மை மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை போன்று (சலுகைகள் அல்ல) உரிமைகள் கேட்டு போராடுவது வழக்கம்.ஆனால் பாரத நாட்டில் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் போன்று (ஹஜ் சலுகை,சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை,சர்ச்,மசூதிகள் போன்றவைகளில் அரசு தலையிடாமை) தங்களுக்கும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதாவது மத்த நாடுகளில் நாய் வாலை ஆட்டுகிறது ....இங்கு மட்டுமே வால் நாயை ஆட்டுகிறது.

7.ஆர் எஸ் எஸ் --ன் போலி தேசபக்தி என்று சொல்லி உள்ள ஞாநி அவர்களுக்கு, இன்றைய பாதியாவது காஷ்மீர் நம்மிடம் இருப்பதற்க்கு ஆர் எஸ் எஸ் -தான் காரணம். பாவம் உங்களுக்கு அந்த வரலாறு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை...நீங்கள் தான் பிரிவினை கேட்ட ஈரோட்டு பெரியாரின் கருத்துகளை மட்டுமே மனப்பாடம் செய்பவர் ஆயிற்றே..இந்தியாவுடன் இணைய தயக்கம் காட்டிய காஷ்மீர் மன்னர் ஹரிசிங்-குடன் பேசி சம்மதிக்க வைத்தவர் அப்போதைய ஆர் எஸ் எஸ் தலைவர் திரு.குருகோல்வால்கர் தான் .இந்திய படைகள் காஷ்மீர் வரும் முன்பே 1947 அக்-11 -ல் ஆக்கிரமித்த பாகிஸ்தான் படைகளுடன் உயிரை பணையம் வைத்து ஜம்முவை மீட்டு தாய் நாட்டின் பகுதியை காத்தவர்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் .ஜம்மு விமான தளத்தை 500 ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் 7 நாட்கள் , 24 மணி நேரமும்

செப்பனிட்டு பாரத ராணுவத்தின் டெக்கோட்டா விமானங்கள் தரை இறங்க வழிஏற்படுத்தினர்.கோக்லியில் மலைசரிவில் ராணுவத்தின் 20 வெடி மருந்து பெட்டிகள் விழுந்த நிலையில் 20 தொண்டர்களுடன் அதை மீட்க போய் 6 பேர் உயிரிழந்து 17 பெட்டிகளை ராணுவத்திடம் ஒப்படைத்த ஆர் எஸ் எஸ் --ன் தேச பக்தி போலியானதா.. ? 1962 சீனப்படையெடுப்பின் போது ராணுவத்தின் பல நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் இருந்தனர்.இதனால் மனம் கவரப்பட்ட பண்டித நேரு 1963 ஜனவரி26-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ளுமாறு ஆர் எஸ் எஸ் -யை அழைத்து 3000 தொண்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்றது வரலாறு..1965 பாகிச்தான் போரின் போது போலீஸ் வேறு பணிகளுக்கு செல்ல டில்லியின் போக்குவரத்து பணிகளை 22 நாட்களும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்தான் கவனித்தனர்.போரின் போது எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவிகள் செய்து தைரியமூட்டியது மற்றும் ராணுவத்திற்கு பல தகவல்களை உடனடியாக அளித்தது போன்ற வியத்தகு பணிகளை செய்தனர்.போர் முடிவடைந்த போது ஜெனரல் குல்வந்த் சிங் என்ற ராணுவ அதிகாரி சொன்னார் 'பாரதத்தின் வாள் ஏந்திய கரம் பஞ்சாப் என்றால் பஞ்சாபின் வாள் ஏந்திய கரம் ஆர் எஸ் எஸ் 'என்று...இன்னும் பல பல....தேசத்தின் தற்காப்புக்கு உடனடி தயார் நிலையில் இருப்பது ஆர் எஸ் எஸ்.புரிந்து கொள்ளூங்கள்.





பி எஸ் ராஜேஷ்



rajeshshree@yahoo.com

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி :

                           மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி :     ( நன்றிwww.Tamilthamarai.com)


சுவாமி விவேகானந்தர் அவர்கள் 110 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிகாகோ மாநாடு செல்வதற்குத் தீர்மானித்தார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று

150 ஆவது பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜியின் 150 ஆவது பிறந்த ஆண்டினை நாட்டிலுள்ள அனைத்து தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், துறவியர்கள், பல வகையில் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் கூட சுவாமிஜியின் 150 வருடத்தினைக் கொண்டாடத் துவங்கியுள்ளன.

சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் சென்று அவர்கண்ட கனவினை நினைவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவங்கிய நாள் முதல் பாடுபட்டு வருகிறது. சுவாமிஜியின் 150 வருடத்தினை வருகின்ற 2013-14 ஆம் வருடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளது. அதன் துவக்கமாக சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் எல்லையும் குமரி மாவட்டத்தின் எல்லையும் சந்திக்கும் இடமான காவல்கிணறு சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் இந்த பிரம்மாண்டமான ஆர்.எஸ்.எஸ்.சாங்கிக் வெற்றிகரமாக நடந்தது. குமாரபுரத்தில் இருக்கின்ற ராம்கோ நிறுவனத்தின் காற்றாலைப் பண்ணையில் (சுமார் 50 ஏக்கர் பரப்பில்) இந்நிகழ்ச்சி நடந்தது.

பிரமாண்டமான காற்றாலைகளுக்கு நடுவே குமரிக் கடலுக்கும் மகேந்த்ரகிரி என்னும் பெயருடன் புகழ் பெற்றுத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் அழகிய பிரம்மாண்டமான மைதானத்தில் தென்தமிழக சங்க சாங்கிக் (கூடுதல்) நடந்தது. பொட்டல் காடாக இருந்த அவ்விடத்தை பெரும் தன்மையுடன் ராம்கோ நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சி நடத்திடத் தந்து உதவியதுடன் அந்த பிரம்மாண்டமான மைதானத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றி மைதானத்தை சமன் செய்தும் கொடுத்து உதவினர்.

இந்நிகழ்ச்சியில் தென் தமிழகத்திலிருந்து மட்டும் சங்க சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,906 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதில் துறவியர்கள், சான்றோர்கள், சங்க ஆதரவாளர்கள் மற்றும் தாய்மார்கள், சகோதரிகள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 51, 699 பேர் கலந்து கொண்டனர். ஆகமொத்தம் சுமார் 70,000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.



இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக எவ்விதமான விளம்பரமும் கிடையாது. சுவர் எழுத்து கிடையாது. பிரமாண்டமான சுவரொட்டிகள் இல்லை. துண்டுப் பிரசுரங்கள் கூடக் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் கூட எங்கும் காணப்படவில்லை. கட் அவுட், ப்ளெக்ஸ் போர்டு எதுவும் எந்தத் தொண்டராலும் வைக்கப்படவில்லை. வழக்கம் போல் தமிழக தினசரிகள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிப் பற்றி மாநில அளவில் எந்த செய்தியையும் பிரசுரம் செய்திடவில்லை. குமரி நெல்லை தூத்துக்குடிப் பகுதிகளில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பது பற்றி சில செய்திகள் நாளிதழ்களில் இடம் பெற்றன. இருந்த போதிலும் ஹிந்துக்கள் திராவிட மாயையிலிருந்து விடுபட்டு வருவதையும் நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரம்மாண்டமான சாங்கிக் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பருந்துகள் 1,930 வேன்கள் 320 கார்கள் 396 இரு சக்கர வாகனங்கள்.


மாற்றுத் திறனாளிகள் 21 பேர் சங்க சீருடை அணிந்து கொண்டு 18 வாகனங்களில் 3 சக்கர வாகனங்களில் 20 கி.மீ. தூரம் பயணம் செய்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கோவை மதுரை பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களும் சங்க சீருடை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.

அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த படி சரியாக மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள் விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அவர் மைதானத்தின் கடைசிப் பகுதியில் இருந்து திறந்த ஜீப் ஒன்றில் வருகை புரிந்தார். அவருடன் ஜீப்பில் தலைமை வகித்த நீதிபதி அரு.ராமலிங்கம் ஆர்.எஸ்.எஸ்.தென் தமிழகத் தலைவர் ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

மாநாட்டு மேடை 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மிகப் பிரம்மாண்ட மேடையில் ஒரு பக்கம் துறைவியர்கள் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். அருகில் வரவேற்புக் குழுவினருக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் பலர் அமர்ந்திருந்தனர்.

மேடை 15 அடி உயரம் 105 அடி நீளம் 25 அடி அகலம் கொண்டிருந்தது. மேடைக்கு முன்பு அழகிய வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது. அதை சங்க ஸ்வயம்சேவகர்கள் வீட்டுத் தாய்மார்கள் போட்டிருந்தனர்.


சங்கத்தின் மூத்த பிரசாரக் திரு.கே.சூரியநாராயண ராவ், தென் பாரத பிரசாரக் திரு.சேது மாதவன், கர்நாடக ஆந்திர மாநில பிரசாரக் திரு.ஜெயதேவ், அகில பாரத சேவா பிரமுக் திரு.சீதாராம் கேடிலய, சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத இணை அமைப்பாளர் திரு.பா.ரா.கிருஷ்ணமுர்த்தி, பா.ஜ.க.தேசிய இணை அமைப்பாளர் திரு.வீ.சதீஷ், தமிழக பா.ஜ.க.பிரமுகர் திரு.இல.கணேசன் ,பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன், உட்பட சங்கத்தின் மற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பரமபூஜனீய சர் சங்க சாலக் மோகன் பாகவத் அவர்கள் ஹிந்தியில் ஆற்றிய சொற்பொழிவினை தென் பாரத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை அமைப்பாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன் அவர்கள் தமிழாக்கம் செய்தார்.


துவக்கத்தில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் இணைந்து இந்த யுகம் இந்து யுகம் இணையில்லா சங்க யுகம் எனும் பாடலைப் பாடினர். அப்பாடலை அனைவரும் இணைந்து பாடியத்தை கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய சங்கப் ப்ரௌப்பளர்கள் வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சமுதாயத் தலைவர்கள் துறவியர்கள் உட்பட விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்.செயலாளர் திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். வரவேற்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசக் கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.




கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற ஒரு ஷாகாவில் இருந்து மட்டும் (சங்கக் கிளை) 60 பேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

திருச்சி மாநகரில் இருக்கின்ற 81 பஸ்திகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

618 கிராமங்களில் இருந்து சங்க ஸ்வயம் சேவகர்கள் வந்திருந்தனர்.

மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர்.

3,469 புதிய ஸ்வயம் சேவகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர்.

காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர்.

1,50,000 சதுர அடி நிலப்பரப்பில் சங்கஸ்தான் அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

அருகில் டாஸ்மாக் கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச் ராஜா, அவருடைய தந்தை யோகா மாஸ்டர் திரு.ஹரிஹரன், ஹெச் ராஜாவின் மகள் மற்றும் அவரது பேத்தி என 4 தலைமுறையினர் பங்கேற்றிருந்தனர்.

தமிழக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் சங்க சக்தி வலுப்பெறும்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

RSS

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தென்மண்டல சங்கம நிகழ்ச்சி

கடின உழைப்பும், தேசப்பற்றும், தியாகமும் இந்த நாட்டை உயர்த்தும்; அப்படிப்பட்ட பணியை ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது என்று, அதன் தலைவர் மோகன் பாகவத் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல சங்கம நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தரின், 150-வது பிறந்த நாள் விழாவை, நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று பலர் நினைக்கலாம். அவர் எப்போதும் நாட்டு மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பாரதத்தை தான் பிற நாடுகள் பின்பற்ற வேண்டும், நாம் பிற நாடுகளை பின்பற்றக் கூடாது என்று, விவேகானந்தர் கூறினார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆட்சியாளர்கள் இன்னும் வெளிநாட்டை பின்பற்றுவதால், நம் நாட்டின் பண்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளோம்.






உலகில் எந்த மூலையிலும் இந்து மக்கள் பாதிக்கப்பட்டால், அதை எனது பாதிப்பு என்று உணரும் மக்கள் சக்தியை உருவாக்க வேணடும் என்று, விவேகானந்தர் விரும்பினார். பிறருக்கு உதவி செய்யும் மக்கள் சக்தி வேண்டும். அப்படிப்பட்ட பணியை தான், ஆர்.எஸ்.எஸ்., செய்து கொண்டிருக்கிறது. இந்தியா உயர்ந்து நின்றால் தான், இந்த உலகம் உயர்ந்து நிற்கும். இதற்காக, கிராமங்கள் தோறும் பயிலரங்கங்கள் நடத்த வேண்டும், ஒரே ஜாதி, ஒரே பண்பாடு என்ற செய்தியை, விவேகானந்தரின் 150-வது ஆண்டு செய்தியாக நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைவர் மாரிமுத்து, வரவேற்பு குழு தலைவர் ரவீந்திரன், செயலர் ஸ்ரீனிவாசகண்ணன், தருமபுர ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியா, காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சாமி தம்புரான், நாங்குனேரி வானமாமலை மடம் ராமானுஜ ஜீயர், ஆனைக்கட்டி ஆதர்ஷ் வித்யா குருகுலம் தயானந்த சரஸ்வதி, திவ்யானந்த் மகராஜ், கமலாத்மானந்தர், அகிலானந்தர், சுவாமி ஓங்காரநந்தர், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமி, சைதன்யானந்த மகராஜ், சிவலிங்கேஸ்வர சுவாமி, துரியாம்ருதானந்தபுரி, ராகவானந்தா, அஜித்சைதன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.