செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தென்மண்டல சங்கம நிகழ்ச்சி

கடின உழைப்பும், தேசப்பற்றும், தியாகமும் இந்த நாட்டை உயர்த்தும்; அப்படிப்பட்ட பணியை ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது என்று, அதன் தலைவர் மோகன் பாகவத் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல சங்கம நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தரின், 150-வது பிறந்த நாள் விழாவை, நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று பலர் நினைக்கலாம். அவர் எப்போதும் நாட்டு மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பாரதத்தை தான் பிற நாடுகள் பின்பற்ற வேண்டும், நாம் பிற நாடுகளை பின்பற்றக் கூடாது என்று, விவேகானந்தர் கூறினார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆட்சியாளர்கள் இன்னும் வெளிநாட்டை பின்பற்றுவதால், நம் நாட்டின் பண்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளோம்.






உலகில் எந்த மூலையிலும் இந்து மக்கள் பாதிக்கப்பட்டால், அதை எனது பாதிப்பு என்று உணரும் மக்கள் சக்தியை உருவாக்க வேணடும் என்று, விவேகானந்தர் விரும்பினார். பிறருக்கு உதவி செய்யும் மக்கள் சக்தி வேண்டும். அப்படிப்பட்ட பணியை தான், ஆர்.எஸ்.எஸ்., செய்து கொண்டிருக்கிறது. இந்தியா உயர்ந்து நின்றால் தான், இந்த உலகம் உயர்ந்து நிற்கும். இதற்காக, கிராமங்கள் தோறும் பயிலரங்கங்கள் நடத்த வேண்டும், ஒரே ஜாதி, ஒரே பண்பாடு என்ற செய்தியை, விவேகானந்தரின் 150-வது ஆண்டு செய்தியாக நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைவர் மாரிமுத்து, வரவேற்பு குழு தலைவர் ரவீந்திரன், செயலர் ஸ்ரீனிவாசகண்ணன், தருமபுர ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியா, காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சாமி தம்புரான், நாங்குனேரி வானமாமலை மடம் ராமானுஜ ஜீயர், ஆனைக்கட்டி ஆதர்ஷ் வித்யா குருகுலம் தயானந்த சரஸ்வதி, திவ்யானந்த் மகராஜ், கமலாத்மானந்தர், அகிலானந்தர், சுவாமி ஓங்காரநந்தர், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமி, சைதன்யானந்த மகராஜ், சிவலிங்கேஸ்வர சுவாமி, துரியாம்ருதானந்தபுரி, ராகவானந்தா, அஜித்சைதன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக