செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஞாநிக்கு சில கேள்விகள்-- திண்ணை 29.04.2004

--------------------------------------------------------------------------------

ஞாநிக்கு சில கேள்விகள்   (  திண்ணை 29.04.2004)

(பி எஸ் ராஜேஷ் )


திரு ஞாநி அவர்களுக்கு,

தேர்தல் சீர்திருத்தம் பற்றிய கட்டுரையில் உருப்படியாக ஏதாவது குறிப்பிட்டுஇருப்பீர்கள் என்று படித்து பார்த்தால் ஞாநிகளிடம் துறவிகளிடம் இருக்கின்ற ஞானம் உங்கள் கட்டுரையில் இல்லை.வெறுமனே பாஜக எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக உள்ளது.உங்களிடம் சில கேள்விகள்.

1 .மத்தியில் பாஜக--வை ஆதரிக்காத கட்சிகள் என்று குறிப்பிட்டுள்ள கம்யூனிஸ்ட்கள் 1989-ல் தேசிய முன்ணனி என்ற கூட்டணியில் பாரதிய ஜனதாவுடன் இருந்தது தங்களூக்கு மறந்து விட்டதா.. ?

2.பாரதீய ஜனதாவின் விஸ்வரூபம் தான் தங்களை தேர்தல் சீர்திருத்தம் பற்றி சிந்திக்க தூண்டியதா.. ?இதற்கு முன்னர் சீர்திருத்தம் பற்றி எந்த மேடையிலோ அல்லது பத்திரிக்கையிலோ குறிப்பிட்டு இருக்கின்றீர்களா.. ? ஆகா நாட்டை பற்றி சிந்தனை உங்களுக்கு வர கூட பாரதிய ஜனதா தான் காரணமா.. ? நல்லது.ஏன் சுத்தி வளைத்து பேச வேண்டும்...பாரதீய ஜனதாவை மட்டும் தடை பண்ணி விடலாமே.. ?

3.மதவாத பா.ஜ.க என்று சொல்லி உள்ளீர்கள்.எது மதவாதம்.. ?அனைவரும் சமம்.இமையம் முதல் குமரி வரை ஓரே நாடு,ஒரே மக்கள், ஓரே சட்டம் .இதில் எங்கே உள்ளது பாரபட்சம் ?அனைவருக்கும் ஒரே நீதி இது மதவாதமா.. ?காஷ்மீருக்கு மட்டும் பிரிவு370-ன்படிதனிச்சலுகை.இந்தியபிரதமரேநினைத்தாலும் ஒரு கிரவுண்ட் அல்ல ஒரு செண்டி மீட்டர் இடம் காஷ்மீரில் வாங்க முடியாது..காஷ்மீரில் மட்டும் தொழில் வரி,வீட்டு வரி,சொத்து வரி இல்லை.காஷ்மீரி பெண் இந்தியாவின் பிற மாநில ஆடவரை திருமணம் செய்தால் பொண்ணுக்கு குடும்ப சொத்தில் பங்கு இல்லை.காஷ்மீரில் மட்டும் ஒரு காலம் வரையில் முதல்வரை பிரதமர் என்று சொல்லும் நிலை..இதை எதிர்த்து ஒரு நாட்டுக்குள் இரு பிரதமரா.. ? என போராடி கொலை செய்யப்பட்டவர் பாரதிய ஜனசங்க தலைவர் ஷியாம பிரசாத் .காஷ்மீருக்குள் நுழைய பெர்மிட் வேண்டும் என்ற நிலையை எதிர்த்து போராட்டம் செய்தது யார்.. ? இதே இன்றைய பா.ஜ.க தான்...கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். மாஸ்கோவுக்கும் டில்லிக்கும் ரஷ்யா அரசு செலவில் சொகுசு பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்..பாரததுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது இந்தியாதான் தவறு செய்கிறது என்று சொல்லி பகிரங்கமாக சீனாவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லை தாண்டிய நேசக்காரர்களுக்கா நீங்கள் ஆதரவு தர சொல்கீறீர்கள்...முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து பாரத நாட்டை விடுதலை செய்ய சீன ராணுவம் வந்ததாக கூறியவர்கள் கம்யூனிஸ்ட்-ன் ஒரு பிரிவினர்..இது தான் தாங்கள் விரும்பும் தேசபக்தியா.. ?.. ?

4. எது மதவாதம் ?ஆப்கானில் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த டில்லியின் இமாம் புகாரி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களிடம் என்ன பேசினார்... 'அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்க இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்னை தடுத்தால் அதுஎன் கால் தூசுக்கு சமம் என்ற போது பாஜக-வை தவிர வேறு எந்த கட்சிக்காவது கண்டிக்க தைரியம் இருந்ததா,, ?

5. பாரதத்தின் பாராளுமன்றத்தில் எம்.பி யாக அப்போதிருந்த இப்ராகிம் சுலைமான் சேட் பாகிஸ்தானில் போய் என்ன சொன்னார்..இந்தியாவில் முஸ்லீம் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று.. ' இதை ஏன் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்கவில்லை.. ?

6. பாரதிய ஜனதாவில் இஸ்லாமியர்கள்,கிருஸ்தவர்கள் ,சீக்கியர்கள் பல பொறுப்புகளில் இருக்கின்றனர்.அது உங்கள் பார்வையில் மதவாத கட்சி. முஸ்லீம் லீக்கில் இந்துக்கள் இருக்கின்றனரா.. ?ஆனால் அதுமதசார்பற்ற கட்சி..முஸ்லீம்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள ,முஸ்லீம் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள தேசபிரிவினைக்கு காரணமான முஸ்லீம் லீக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தானே மதவாத கட்சியாகும்.. ?ஆகா குப்பைக்கு போகும் உங்கள் மதசார்பற்ற தன்மையை எப்படி பாராட்டுவது.. ?

எந்த நாட்டிலும் சிறுபான்மை மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை போன்று (சலுகைகள் அல்ல) உரிமைகள் கேட்டு போராடுவது வழக்கம்.ஆனால் பாரத நாட்டில் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் போன்று (ஹஜ் சலுகை,சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை,சர்ச்,மசூதிகள் போன்றவைகளில் அரசு தலையிடாமை) தங்களுக்கும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதாவது மத்த நாடுகளில் நாய் வாலை ஆட்டுகிறது ....இங்கு மட்டுமே வால் நாயை ஆட்டுகிறது.

7.ஆர் எஸ் எஸ் --ன் போலி தேசபக்தி என்று சொல்லி உள்ள ஞாநி அவர்களுக்கு, இன்றைய பாதியாவது காஷ்மீர் நம்மிடம் இருப்பதற்க்கு ஆர் எஸ் எஸ் -தான் காரணம். பாவம் உங்களுக்கு அந்த வரலாறு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை...நீங்கள் தான் பிரிவினை கேட்ட ஈரோட்டு பெரியாரின் கருத்துகளை மட்டுமே மனப்பாடம் செய்பவர் ஆயிற்றே..இந்தியாவுடன் இணைய தயக்கம் காட்டிய காஷ்மீர் மன்னர் ஹரிசிங்-குடன் பேசி சம்மதிக்க வைத்தவர் அப்போதைய ஆர் எஸ் எஸ் தலைவர் திரு.குருகோல்வால்கர் தான் .இந்திய படைகள் காஷ்மீர் வரும் முன்பே 1947 அக்-11 -ல் ஆக்கிரமித்த பாகிஸ்தான் படைகளுடன் உயிரை பணையம் வைத்து ஜம்முவை மீட்டு தாய் நாட்டின் பகுதியை காத்தவர்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் .ஜம்மு விமான தளத்தை 500 ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் 7 நாட்கள் , 24 மணி நேரமும்

செப்பனிட்டு பாரத ராணுவத்தின் டெக்கோட்டா விமானங்கள் தரை இறங்க வழிஏற்படுத்தினர்.கோக்லியில் மலைசரிவில் ராணுவத்தின் 20 வெடி மருந்து பெட்டிகள் விழுந்த நிலையில் 20 தொண்டர்களுடன் அதை மீட்க போய் 6 பேர் உயிரிழந்து 17 பெட்டிகளை ராணுவத்திடம் ஒப்படைத்த ஆர் எஸ் எஸ் --ன் தேச பக்தி போலியானதா.. ? 1962 சீனப்படையெடுப்பின் போது ராணுவத்தின் பல நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் இருந்தனர்.இதனால் மனம் கவரப்பட்ட பண்டித நேரு 1963 ஜனவரி26-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ளுமாறு ஆர் எஸ் எஸ் -யை அழைத்து 3000 தொண்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்றது வரலாறு..1965 பாகிச்தான் போரின் போது போலீஸ் வேறு பணிகளுக்கு செல்ல டில்லியின் போக்குவரத்து பணிகளை 22 நாட்களும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்தான் கவனித்தனர்.போரின் போது எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவிகள் செய்து தைரியமூட்டியது மற்றும் ராணுவத்திற்கு பல தகவல்களை உடனடியாக அளித்தது போன்ற வியத்தகு பணிகளை செய்தனர்.போர் முடிவடைந்த போது ஜெனரல் குல்வந்த் சிங் என்ற ராணுவ அதிகாரி சொன்னார் 'பாரதத்தின் வாள் ஏந்திய கரம் பஞ்சாப் என்றால் பஞ்சாபின் வாள் ஏந்திய கரம் ஆர் எஸ் எஸ் 'என்று...இன்னும் பல பல....தேசத்தின் தற்காப்புக்கு உடனடி தயார் நிலையில் இருப்பது ஆர் எஸ் எஸ்.புரிந்து கொள்ளூங்கள்.





பி எஸ் ராஜேஷ்



rajeshshree@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக