செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்


                 போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்

பி.எஸ்.ராஜேஷ்                                 ( 27.08.2004  Thinnai)


ஊழல் , கிரிமினல் மற்றும் பாலியல் பலாத்கார குற்றபத்திரிக்கை பின்னணி கொண்ட மத்திய அமைச்சர்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி போராடும் போது, காங்கிரஸீன் மத்திய தலைமை பாஜக -வில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள எவரேனும் மீது இத்தைகய வழக்குகள் இருக்கிறதா என தேடிய போது பல ஆண்டுகளுக்கு முன் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு அவர்களுக்கு தெரியவே, என்ன வழக்கு என்பதே தெரியாமல் ம.பி. முதல்வராக இருந்த உமா பாரதியை ராஜினாமா செய்யுமாறு பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்....அவரும் பதவி விலகி கோர்ட்டில் சரணடைந்து தற்போது சிறையில் இருக்கிறார்....

இத்தாலிய மங்கையின் தலைமையிலான காங்கிரஸிடம் நாம் தேசிய உணர்வுகளை எதிர்பார்ப்பதுதவறு என்பதைஇத்தருணத்திலும் அவர்கள் உணர்த்தினர்....

உண்மையில் உமாபாரதி செய்தது என்ன ? கொலை முயற்சி வழக்கு போட என்ன காரணம் ?

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் அப்போது நடந்தது என்ன.. ? சுதந்திர பாரதத்தில் தேசிய கொடியை ஏற்றுவது கொலைபாதக செயலா...சற்று விரிவாக பார்ப்போம்.

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் லால் செளக் என்ற ஓரு மைதானம் உள்ளது...1980-களில் இறுதியில் உள்ளூர் பத்திரிகைகளில் முஸ்லிம் தீவிரவாதிகள் முடிந்தால் இந்த மைதானத்தில் பாரத கொடியை ஏற்றுங்கள் என சவால் விட , ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேச பக்த அமைப்புக்ள் மாநில , மத்திய அரசுகளிடம் அந்த சவாலை ஏற்று பாரத தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தியது....

ஆனால் தீவிரவாதிகளின் மிரட்டலை மாநில , மத்திய,அரசுகள் சந்திக்க மறுக்க, ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (அகில பாரத மாணவர் அமைப்பு) காஷ்மீர் மாநிலத்திற்குள் கொடியேற்ற நுழைந்த போது 1989-இல் உதாம்பூர் ரயில் நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள்....பிரதமர் வி.பி.சிங் -அவர்களை ஏ.பி.வி.பி. பிரதிநிதிகள் சந்தித்து பாரத தேசிய கொடியை லால் செளக்-கில் ஏற்ற கோரிக்கை விடுத்தனர்....ஒரே வாரத்தில் அதே இடத்தில் கொடியேற்றுகிறேன்....என வி.பி.சிங் சூளுரைக்க ஏ.பி.வி.பி தொண்டர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்....

ஆனால் வி.பி.சிங், சந்திரசேகர் பின்பு வந்த நரசிம்ம ராவ் ஆகியோரும் தேசிய கொடியை ஏற்றாமல் போகவே பாஜக அந்த சவாலை சந்திக்க முன் வந்தது....1991-இல் அப்போதைய பாரதீய ஜனதாவின் அகில பாரத தலைவர் பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி 'ஒருமைப்பாட்டு யாத்திரை ' (ஏகதா யாத்திரை) என பெயரிட்டு கன்னியாகுமரியிலிருந்து, சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சகோதரரிடமிருந்து மூவர்ண கொடியை பெற்று, பாரத முழுவதும் ரதயாத்திரை சென்று காஷ்மீரில் என்ன நடக்கிறது என மக்களிடம் விளக்கினார்....போலி மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் அன்றைய ஜோஷியின் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தின ....அதாவது சுதந்திர பாரதத்தில் தேசிய கொடியை

ஏற்றுவது மைனாரிட்டி ஓட்டு பொறுக்கும் கட்சிகளுக்கு பிடிக்கவில்லை....

ஸ்ரீநகரின் லால் செளக்கில், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மத்தியில்,ஜோஷி 1992-ஜனவரி 26-ல்

பாரதத்தின் மூவர்ண கொடியை வெற்றிகரமாக ஏற்றினார்....

அதே தினம் நாடு முழுவதும் பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடிகொடியேற்றப்பட்டது...அப்போது கர்நாடக மாநிலம் ஹுப்ளி -கிட்டூர் ராணி சென்னம்மா மைதானத்தில் தேசிய கொடியேற்ற பாஜகவினரும்,பிற மக்களும் சென்ற போது ,அப்பகுதி முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே , முஸ்லீம்களின் தேச விரோத எதிர்ப்புக்கு பணிந்து, மதரீதயான பதட்டம் ஏற்படும் என்ற காரணம் காட்டி கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் அரசு தேசியகொடியேற்ற தடை விதித்தது....சுதந்திர பாரதத்தில் வெட்ககேடான இந்த செயலை கண்டிக்க கருணாநிதிகளூம் , வைகோகளும், சுர்ஜித்களும் முன்வர வில்லை....ஒரே காரணம் ஓட்டு வங்கிதான்....

உண்மையில் இந்திரா காந்தியால் 1971 டிச23 அன்று மத்திய அரசு கொண்டு வந்த THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR ACT -69, 1971 புதிய சட்டத்தின் படி குடியரசு, சுதந்திர தினங்களில் தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்தாலோ அவமரியாதை செய்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும் ....ஆனால் கொடியேற்ற
சென்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி தனது முஸ்லீம் பற்றையும் போலி மதசார்பற்றதன்மையையும் நிருபித்தது காங்கிரஸ் அரசு....

முஸ்லீம்களால் ஈத்கா என அழைக்கப்படும் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் Anjuman-e-Islam என்ற முஸ்லீம் அமைப்புக்கும் ஹுப்ளி நகராட்சிக்கும் நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தன....1939 முதல் அடுத்து வருகிற 2038 வரை தாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளதாக Anjuman-e-Islam கூறியதை முன்சீப் முதல் உயர் நீதி மன்றம் வரை தள்ளுபடி செய்து, அந்த மைதானம் பொதுவான இடம் என்று தீர்ப்பளித்தது....மேலும் உயர் நீதி மன்றம் தனது தீர்ப்பில்

அந்த மைதானத்தில் முஸ்லீம்கள் வருடத்தில் இருமுறை தொழுகை நடத்தவும்,மேலும் Anjuman-e-Islam கட்டிய கட்டிடத்தை இடிக்கவும் உத்தரவிட்டது....ஆனால் அதற்கு தடைவிதிக்க, Anjuman-e-Islam உச்ச நீதிமன்றத்தை அணுகியது....இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் , அந்த மைதானம் பொதுவான இடம் என்றும் Anjuman-e-Islamஅமைப்பிற்கு சொந்தமானதல்ல என்றும், வருடத்தில் இருமுறை தொழுகை நடத்த மட்டுமே அனுமதிப்பதாகவும் கூறியது....

இந்த மைதானத்தில் சில பகுதிகளில் சந்தை போன்று காய்கறி , பழங்கள் விற்பனையும், இன்னொரு பகுதியில் சிலர் ஆடு , மாடுகளை மேய்த்து கொண்டும் , சில பகுதிகளை சிறுநீர் கழிக்கவும் பலர் பலவிதமாக பயன்படுத்தி வந்தனர்...ஆனால் பாரத தேசிய கொடியை ஏற்ற மட்டுமே முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்....

1992 முதல் ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் அந்த மைதானத்தில் பாரதீய ஜனதாகட்சியினர் கொடியேற்ற முயற்சிப்பதும், முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், கடைசியில்போலீஸ் தடியடிமற்றும் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி சூட்டில் முடிவதும் வாடிக்கையாகி விட்டது....

இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் அகில பாரத பொறுப்பில் இருந்த செல்வி உமாபாரதியை 1994 -ஆகஸ்ட் 15 -இல் ஹுப்ளி -யில் கிட்டூர் ராணி சென்னம்மா மைதானத்தில் தேசிய கொடியேற்றஅழைத்திருந்தனர்....கூட்டம் சேரவோ, அந்த மைதானத்தில்
தேசிய கொடியேற்றவோ அரசு தடை விதித்த நிலையில் உமா பாரதி தலைமையில் பாஜக வினர் தடையை மீறிகொடியேற்றினர்....உண்மையில் அந்த மைதானத்தில் தேசிய கொடியேற்றப் பட்டதால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டிருக்க வேண்டும் ....ஆனால் மதவெறி பிடித்த முஸ்லீல் அமைப்பின் வெறித்தனமான பேச்சால் முளை சலவை செய்யப்பட்டிருந்த முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.... 5 பேர் கொல்லப் கொல்லப்பட்ட இந்த வன்முறைக்கு தேசிய கொடி ஏற்றிய உமா பாரதி எப்படி பொறுப்பாக முடியும்.. ?

முகமது நபியும், அல்லாவும் ஹுப்ளி -யில் பாரத தேசிய கொடியை ஏற்ற கூடாது.... மீறி ஏற்றப்பட்டால் தண்டிப்பேன் என முஸ்லீம்களிடம் சொன்னார்களா.. ? பாரத நாட்டின் ஏதாவது பகுதியில் தேசிய கொடிஏற்ற தடை என்பது ஒரு வித அவமானம் என்பது நமது மதசார்பற்ற( ?)கட்சிகளுக்குஏன்புரிவதில்லை....அமெரிக்காவில்,இங்கிலாந்தில்,ஜெர்மனியில் பாரத கொடியேற்றி சுதந்திரதினம்கொண்டாடுகிறார்கள்....ஆனால் சுதந்திர பாரதத்தில் தடை..

பின்னர் நடந்தது என்ன தெரியுமா.. ....Anjuman-e-Islam அமைப்பின் கிளையான Deendar Anjuman என்ற இயக்கம், தடை செய்யப்பட்ட சிமி (இஸ்லாமிய மாணவர் இயக்கம்) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது, மேலும் ஆந்திரா, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் மசூதிகள், சர்ச்கள் போன்றவற்றில் குண்டு வைத்து மத கலவரத்தை தூண்ட நினைத்த காரணத்திற்காக கர்நாடகாவை அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசாலேDeendar Anjuman மீது வழக்கு தொடரப்பட்டது...பலர் கைதுசெய்யப்பட்டனர்....

http://www.rediff.com/news/2001/may/03ap1.htm
http://www.rediff.com/news/2001/may/17ap.htm

முதலில் ஆர்.எஸ்.எஸ். மீது பழிபோட்ட நமது மதசார்பற்றகட்சிகளும்,
முற்போக்கு பத்திரிக்கைகளும் பின்னர் வாய் மூடி மெளனம் காத்தது வேறு விஷயம்....பாஜக-வின் இடைவிடாத போராட்டம் காரணமாக கர்நாடக அரசுடன் ஒரு அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட்டு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் அந்த மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்ற முடிவு எட்டப்பட்டது...பின்னர் உமாபாரதியின் மீதான வழக்கில் ஆதாரம் இல்லை என்று அரசு கோர்ட்டில் தெரிவித்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறியது....ஆனால் தரம்சிங் தனது இத்தாலிய எஜமானியின் விசுவாசத்தை நிரூபிக்க மீண்டும் வழக்கை நடத்த போவதாக அறிவித்துள்ளார்....

ஆகா இன்று மட்டும் சுதந்திர போரட்ட கால தலைவர்கள் உயிருடன் இருந்துஅன்னிய சோனியாவின் எதிர்ப்பாக அரசியல் நடத்தினால்....ஒத்துழையாமை இயக்கத்தின் முடிவில் செளரி-செளரா வில் ஏற்பட்ட வன்முறை காரணமாக காந்தியடிகள் மீது கொலை முயற்சி வழக்கு,வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக அகமத் நகர் சிறையில் அடைக்கப்பட்ட வல்லபாய் படேல் மீது ஒரு வழக்கு , தடையை மீறிய கொடிகாத்த குமரன் மீது இன்னொரு வழக்கு, தடையை மீறி உப்பு காய்ச்சிய ராஜாஜி மீது ஒரு வழக்கு, போட்டாலும் போடுவார்கள்.... நல்ல காலம் அவர்கள் இன்று உயிருடன் இல்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக